லாலாபேட்டை காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்


லாலாபேட்டை காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்
x
தினத்தந்தி 27 May 2020 10:49 AM IST (Updated: 27 May 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை காவிரி ஆற்றுப்பகுதிக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.

லாலாபேட்டை, 

லாலாபேட்டை காவிரி ஆற்றுப்பகுதிக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.

வெளிநாட்டு பறவைகள்

ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள பறவைகள், கடும் குளிர் காலத்தில் அந்த நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு பறந்து செல்கின்றன. தகுந்த சீதோஷ்ணம் மற்றும் இரை கிடைக்கும் பகுதிகளில் அவை தங்குகின்றன. குறிப்பிட்ட காலம் வரை அப்பகுதியில் சுற்றித்திரிந்து இரை தேடும் பறவைகள், பின்னர் ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுக்கே திரும்பி சென்று விடுகின்றன.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவிரி ஆற்றுப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி, பின்னர் அந்த நாடுகளுக்கே திரும்பி செல்வது வழக்கம்.

காவிரி ஆற்றில் சுற்றித்திரிகின்றன

அதன்படி தற்போது வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஏராளமான பறவைகள் லாலாபேட்டை காவிரி ஆற்று படுகைகளில் சுற்றித் திரிகின்றன. வெள்ளை, கருப்பு, சாம்பல் உள்ளிட்ட நிறங்களில், பல்வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் பகலில் காவிரி ஆற்றில் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் சுற்றித்திரிந்து இரை தேடுகின்றன. அப்போது தண்ணீரில் தென்படும் மீன்கள், புழுக்கள் உள்ளிட்டவற்றை பிடித்து உண்கின்றன. இரவு நேரத்தில் அந்த பறவைகள், அருகில் உள்ள மரங்களில் தஞ்சமடைகின்றன.காலை நேரத்தில் லாலாபேட்டை காவிரி ஆற்றில் கூட்டம், கூட்டமாக வெளிநாட்டு பறவைகள் சுற்றித்திரிவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து பறவைகளை கண்டுகளித்து செல்கின்றனர்.

Next Story