விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
கடந்த 2 நாட்களாக, மாவட்டத்தில் புதியதாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்படாத நிலையில் நேற்று 3-வது நாளாக யாருக்கும் நோய் தொற்று இல்லை.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 23-ந் தேதி வரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மீதமுள்ள 324 பேரில் 303 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 21 பேர் மட்டும் விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, மாவட்டத்தில் புதியதாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்படாத நிலையில் நேற்று 3-வது நாளாக யாருக்கும் நோய் தொற்று இல்லை. ஏற்கனவே 303 பேர் குணமடைந்துள்ள நிலையில் நேற்று மேலும் 2 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 618 பேர் 11 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 860 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story