கிணறு வறண்டதால் பயிர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


கிணறு வறண்டதால் பயிர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 27 May 2020 11:43 AM IST (Updated: 27 May 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு பகுதியில் கிணறு வறண்டதால் பயிர்களுக்கு லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

வடகாடு, 

வடகாடு பகுதியில் கிணறு வறண்டதால் பயிர்களுக்கு லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

ஆழ்குழாய் கிணற்று பாசனம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து, இதன் மூலமாக, கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இப்பகுதிகளில் நெல், சோளம், வாழை, கரும்பு, கத்தரி, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய் போன்ற பயிர்களும், மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, காட்டு மல்லிகை, அரளி போன்ற பூஞ்செடி வகைகளையும் பயிரிட்டு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

வறண்டன

தற்போது, கோடை வெயில் கடுமையாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. இதனால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றதற்கும், கடும் கோடை வெயில் தாக்கத்திற்கும் முக்கிய காரணமாக, தைலமரக்காடுகள் உள்ளது.

இந்த தைல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து விடுவதால், ஆண்டு தோறும் இப்பகுதிகளில் போதுமான அளவுக்கு மழை பெய்வதில்லை. இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் விளைவாக தோட்டங்களுக்கு தண்ணீரை ரூ.500 முதல் ரூ.700 வரை விலை கொடுத்து லாரி மூலம் கொண்டு வந்து பாய்ச்சி வருகின்றனர். ஆனால் தண்ணீர் பாய்ச்சும் செலவுக்காவது வருமானம் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Next Story