கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2020 11:51 AM IST (Updated: 27 May 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர், 

கோரிக்கைகளை வலியுறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் நலன் காக்க மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து வகையான விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை அரசாணையாக வெளியிட வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் அதை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தடையை மீறி விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்ரமேஷ் உள்பட பலர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசிலர், வாயில் கருப்பு துணியை முக கவசமாக அணிந்திருந்தனர். அதைத்தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர்.

Next Story