பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: கர்ப்பிணியை எட்டி உதைத்த வாலிபர் கைது


பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: கர்ப்பிணியை எட்டி உதைத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 May 2020 12:09 PM IST (Updated: 27 May 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கர்ப்பிணியை எட்டி உதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம், 

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கர்ப்பிணியை எட்டி உதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பணத்தகராறு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன் (வயது 23). இவர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்த வனித்குமார் என்பவரிடம் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் பிரபாகரன் கல்வெட்டு கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு வனித்குமார் மற்றும் அவரது மனைவி பரிதாபானு (30) ஆகிய இருவரும் வந்து தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர். இதில், அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

உதை

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பரிதாபானுவை, பிரபாகரன் காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வனித்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பரிதாபானு கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story