செண்பகத்தோப்பு அணையில் ஷட்டர் அமைக்கும் பணி - கலெக்டர் ஆய்வு


செண்பகத்தோப்பு அணையில் ஷட்டர் அமைக்கும் பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 May 2020 5:00 AM IST (Updated: 28 May 2020 12:37 AM IST)
t-max-icont-min-icon

செண்பகத்தோப்பு அணையில் ஷட்டர் அமைக்கும் பணியை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணையில் ரூ.16 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிதாக ஷட்டர் அமைக்கும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஷட்டர் அமைக்கும் பணியை ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூறினார். மேலும் அணைப்பகுதி அருகே பொழுது போக்கு பூங்கா அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மகேந்திரன், ஆரணி உதவி செயற் பொறியாளர் அறிவழகன், போளூர் உதவி பொறியாளர் சிவக்குமார், தாசில்தார்கள் போளூர் ஜெயவேலு, ஜமனாமரத்தூர் வெங்கடேசன், தனித்தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் திருவேங்கடம், வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத் உள்பட பலர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து படவேடு கேசவபுரம் பகுதியில் கமண்டல நதியில் அலியாபாத் அணைக்கட்டையும் கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.

Next Story