தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 28 May 2020 4:00 AM IST (Updated: 28 May 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

விடைத்தாள் திருத்தும் பணி

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. அப்படி ஒத்தி வைக்கப்பட்ட பணி தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நேற்று தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தஞ்சையில் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

1,449 பேர்

பட்டுக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணத்தில் கிரைஸ்ட் தி கிங் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிரைஸ்ட் தி கிங் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பணியில் 207 முதன்மைத்தேர்வாளர்களும், அலுவலர்களும், 1,242 உதவி தேர்வாளர்களும் என மொத்தம் 1,449 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மையத்திற்கு வந்த ஆசிரியர்கள் சோப் மூலம் கைகளை கழுவிய பின்னர், அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர்.

சமூக இடைவெளி

அவர்களது கையில் சானிடைசர் தெளிக்கப்பட்டு 3 முக கசவங்கள் வழங்கப்பட்டது. இவற்றை வாங்கி கொண்ட ஆசிரியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைக்கு சென்றனர். அங்கு ஒவ்வொரு அறைக்கும் 8 பேர் வீதம் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அதன்பிறகு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியைகளை அழைத்து வர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் கார், இருசக்கர வாகனங்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்றதால் சில வழித்தடத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்ற வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன.

தஞ்சை தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணியை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்.

Next Story