புதுவையில் கட்டுப்பாட்டு மண்டலம் விரிவாக்கம்; பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
புதுவை தர்மாபுரியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடத்தை சுகாதாரத்துறையினர் விரிவாக்கம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 6,808 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து 12 பேர் வீடு திரும்பி உள்ளனர். புதுவை பிராந்திய பகுதியான மாகியில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வராதபடியும், புதிதாக யாரும் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தர்மாபுரி, அய்யங்குட்டிப்பாளையம், குருமாம்பேட் உள்ளிட்ட சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் விரிவாக்கம் செய்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும் அல்லது நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்தனர். அதையடுத்து அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று அவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story