தஞ்சை விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு


தஞ்சை விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 28 May 2020 4:45 AM IST (Updated: 28 May 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர், 

தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்தார்.

ஆணையர் ஆய்வு

தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், தமிழக அரசின் வேளாண்மை துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விதை சான்றளிப்பு அலுவலக வளாக கட்டிட பணிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.

மேலும் அந்த வளாகத்தில் இயங்கும் தஞ்சை விதைப்பரிசோதனை நிலையத்திற்கு சென்று விதை மாதிரிகளின் தரத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகளையும் அவற்றுக்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

அறிவுரைகள் வழங்கினார்

மேலும் விதைப்பரிசோதனை நிலையத்தில் உள்ள விதை முளைப்புத்திறன் அறையை பார்வையிட்ட அவர், முளைப்புத்திறன் அறையில் பராமரிக்கப்படும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவுகளை கேட்டறிந்தார். விதைப்பரிசோதனை நிலையத்தில் பராமரிக்கப்படும் விதை காப்பு அறையில் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவுகளை கேட்டறிந்து அங்குள்ள காப்பு விதை மாதிரிகளையும் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் கான், விதை ஆய்வு துணை இயக்குனர் பெரியகருப்பன், விதைப்பரிசோதனை அலுவலர் சிவ வீரபாண்டியன், விதைச்சான்று உதவி இயக்குனர் தெய்வநாயகம் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story