திருச்சிற்றம்பலம் அருகே பலகோடி ரூபாய் மரங்கள் வெட்டி கடத்தல்: அதிகாரிகள்-அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்
பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய சம்பவத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது உயர் அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம் அருகே அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய சம்பவத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது உயர் அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
பல கோடி ரூபாய் மரங்களை வெட்டினர்
தஞ்சை மாவட்டம் திருச் சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தின் வழியாக செல்லும் புதுப்பட்டினம் 19-ம் நம்பர் வாய்க்கால் கரையிலும், குளக்குடி குளத்தின் கரையிலும் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத மரங்கள் வெட்டப்பட்டு லாரிகள் மூலமாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப் பட்டு வந்தன.
மரங்கள் வெட்டப்பட்டது குறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள், சம்பவ இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை செய்ததுடன், மரங்கள் வெட்டுவதற்கான கட்டிங் ஆர்டரை(மரம் வெட்டு வதற்கான உத்தரவு) கேட்டுள்ளனர். அவர்கள், கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது விழுந்துள்ள மரங்களை ஏலம் விடப்பட்ட உத்தரவை அவர்கள் காண்பித்துள்ள னர்.
சிறைபிடிப்பு
இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், மர லோடு ஏற்றிய லாரி மற்றும் கிரேன் எந்திரத்தை சிறை பிடித்து ஆவணத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர்.
தொடர்ந்து அவர்களிடம் கிராம மக்கள் நடத்திய விசாரணையில், ஒரத்த நாட்டில் மர அறுவை மில் நடத்தி வரும் ஒருவர், மரங் களை ஏலம் எடுத்துள்ளதாகவும் அவர் தங்களுக்கு வெட்ட அனுமதி தந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை இல்லை
இந்த சம்பவம் தொடர்பாக பேராவூரணி பொதுப் பணித்துறை அதிகாரி களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பட்டுக்கோட்டை வனச்சரகர் இக்பால் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை சார்பில் மரங்கள் ஏலம் விடப்படவில்லை என கூறிவிட்டு சென்று விட்டார்.
அதனைத்தொடர்ந்து பேராவூரணி பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் பிரசன்னா, பிடிபட்ட 3 பேரில் ஒருவர் மீது மட்டும் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் இந்த புகார் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கிராம மக்கள் சிறைபிடித்து வைத்து இருந்த லாரியையும், கிரேனையும் அதன் உரிமையாளர்கள் வந்து எடுத்துச் சென்று விட்டனர். வெட்டப்பட்ட மரங்களில், தூத்துக்குடிக்கு அனுப்பிய 62 டன் மரங்களை தவிர எஞ்சியவை ஆவணம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத் திலும், வெட்டப்பட்ட இடங் களிலும் அப்படியே கிடைக் கிறது.
தடைவிதிப்பு
அரிதான இந்த மருத மரங்கள் மருத்துவ குணங்கள் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை வெட்டுவதற்கு இந்திய வனத்துறை நிரந்த ரமாக தடை விதித்துள்ளது. வெட்டப்பட்ட மரங்களின் இன்றைய சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப் படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததால் இது குறித்து கிராம மக்கள், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்த னர்.
விசாரணை
இதனைத்தொடர்ந்து தஞ்சை மண்டல வன பாதுகாப்புப்படை உதவி வனப்பாதுகாவலர் ராதா கிருஷ்ணன் மற்றும் பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆவணம் கிராம மக்களிடம் இருந்து ஒரு மனுவையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
பட்டுக்கோட்டை வனச்சரகத்தில் 11 இடங்களில் உள்ள தைல, சவுக்கு மற்றும் கருவேல மரங்களுக்கான ஏலம் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி நடந்துள்ளது. ஏல உரிமை ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு மர அறுவை மில் உரிமையாளரின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை உயர் அதிகாரி களின் தீவிர விசாரணையில் அந்த மில் உரிமையாளருக்கும், இந்த ஏலத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும் பிடிபட்டவர்கள் காலாவதியான ஏல உரிமையை கிராம மக்களிடம் பிடிபட்ட இடத்தில் காட்டி உள்ளனர். முதலில் வனத்துறை அதிகாரி களும், பொதுப் பணித் துறையினரும் இந்த விவ காரத்தில் தங்களுக்கு சம்மந்தம் இல்லை என ஒதுங்கி கொண்டனர். பிரச்சினை விஸ் வரூபம் எடுக்க தொடங்கி யவுடன் தற்போது வனத்துறை அதிகாரிகள் காட்டும் ஆவணத்தில் ரூ.14 ஆயிரத்து 117-க்கு கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். கருவேல மரங்களே இல்லாத இடத்தில் அதனை வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டுள்ளது விசார ணையில் தெரிய வந்துள் ளது.
அதிகாரிகள்- அரசியல்வாதிகளுக்கு தொடர்பு
அந்த கட்டிங் ஆர்டரை வைத்துக்கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ள சம்பவம் திருச் சிற்றம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்செயலின் பின்னணியில் அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருப்பது வெட்ட வெளிச் சமாகி உள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று உயர் அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் தெரிவித்த னர்.
Related Tags :
Next Story