சுற்றுலா வளர்ச்சி கழக நூதன போராட்டம்


சுற்றுலா வளர்ச்சி கழக நூதன போராட்டம்
x
தினத்தந்தி 28 May 2020 4:49 AM IST (Updated: 28 May 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு குழாம் சிகல்ஸ் ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 220 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

புதுச்சேரி,

 ஊரடங்கு காரணமாக படகு குழாம் மற்றும் ஓட்டல்கள் கடந்த 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு வருமானம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

அதே நேரத்தில் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தங்களுக்கும் சம்பளம் வழங்கக்கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் சுற்றுலா துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தட்டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் கூட்டு நடவடிக்கை குழு செயலாளர் விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த போராட்டம் நடந்தது.

Next Story