புதிய மின்சார சட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
புதிய மின்சார சட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
புதிய மின்சார சட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மின்சார சட்டத்தை கண்டித்தும், தமிழக அரசு அந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் இடும்பையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலைமணி, ஒன்றிய செயலாளர் சேகர், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால், வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் கோசிமணி, விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஐகோர்ட்டு பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு கொரோனா கால உதவித்தொகை ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நீடாமங்கலம்
அதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல சக்தி துறையுடன் இணைத்ததை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கந்தசாமி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொரடாச்சேரி- முத்துப்பேட்டை
கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் தம்புசாமி தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கேசவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சேகர், காங்கிரஸ் விவசாயிகள் சங்க பிரதிநிதி மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் செல்லதுரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் யோகநாதன், துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், வீரமணி, திருஞானம், மாரிமுத்து, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குடவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சுப்ரவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
விவசாய சங்க நகர செயலாளர்கள் சுந்தர், ஜெயபிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உலகநாதன், பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story