திருத்துறைப்பூண்டியில், குடிமராமத்து திட்ட பணிகள் சிறப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி ஆய்வு


திருத்துறைப்பூண்டியில், குடிமராமத்து திட்ட பணிகள் சிறப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி ஆய்வு
x
தினத்தந்தி 28 May 2020 5:17 AM IST (Updated: 28 May 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில், குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில், குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி ஆய்வு செய்தார்.

குடிமராமத்து திட்ட பணிகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பள்ளங்கோவில் பகுதியில் உள்ள முள்ளியாறு குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், திருக்களார் கிராமத்தில் உள்ள அழகிரி கோட்டகம் பாசன வாய்க்கால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், நாச்சிக்குளம் கிராமத்தில் எல்லை வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், பாண்டி கிராமத்தில் ஓவரூர் வடிகால் வாய்க்கால் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை குடிமராமத்து திட்ட சிறப்பு அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு இடத்திலும் எத்தனை எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடக்கிறது, எவ்வளவு தொலைவுக்கு தூர்வாரும் பணி நடக்கிறது என்பன போன்ற விவரங்களை ஆய்வின்போது சிறப்பு அதிகாரி கேட்டறிந்தார்.

நேரில் கண்காணிக்க அறிவுறுத்தல்

அப்போது பணிகளுக்கு ஏற்ப கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தினார். தண்ணீர் செல்வதற்கு ஏதுவான அமைப்புடன் தூர்வாரப்படுகிறதா? என்பதை பொதுப்பணித்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் நேரில் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர்கள் சிதம்பரநாதன், சோழராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story