கொரோனா பரிசோதனை மாதிரியை சேகரிக்க நடமாடும் மையங்கள் - முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
கொரோனா பரிசோதனை மாதிரியை சேகரிக்க நடமாடும் மையங்களை முதல்- மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
விப்ரோ ஜி.இ. ஹெல்த் கேர் நிறுவனம் சார்பில் கொரோனா பரிசோதனைக்காக நடமாடும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் தொடக்க விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த மையங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பாதுகாப்பாக சளி மாதிரியை சேகரிக்கும் வகையில் விப்ரோ ஜி.இ.ஹெல்த் கேர் நிறுவனம் இந்த நடமாடும் மையங்களை உருவாக்கியுள்ளது. அது போல் 15 மையங்களை உருவாக்கி அரசுக்கு வழங்கியுள்ளது. இது பாதுகாப்பாக, விரைவாக மாதிரியை எடுக்க பயனுள்ளதாக இருக்கும். இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன் படுத்த முடியும்.
பயம் குறையும்
இதை மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கும் எடுத்து செல்ல முடியும். டாக்டர் மற்றும் நோயாளி இடையே தொடர்பு இல்லாமல் சளி மாதிரி சேரிக்க முடியும். இதனால் மருத்துவ பணியாளர்களின் பயம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story