இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கெலமங்கலம், ராயக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீநிவாஸ் முன்னிலை வகித்தார். இதில் நகர செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி பாபு, மகளிர் அணி தலைவி சியாமளா குட்டி என்கிற முனிராஜ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ராயக்கோட்டையில் வட்டார செயலாளர் தொட்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில குழு உறுப்பினர் கெம்பன், நிர்வாகிகள் நாராயணன், முருகன், மாதப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் கொரோனா நிவாரண நிதியை உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பின

Related Tags :
Next Story