பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
தர்மபுரி,
விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அச்சீவர்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 7 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. தர்மபுரி, பாலக்கோடு கல்வி மாவட்டங்களுக்கு அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அரூர் கல்வி மாவட்டத்திற்கு அரூர் இந்தியன் மெட்ரிக் பள்ளியிலும் தலா 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசங்கள் அணிந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அச்சீவர்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 7 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story