நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு வித்யாவிகாஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
இப்பணியில் 184 முதன்மை தேர்வர்கள், 184 கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 1500 உதவி தேர்வர்கள் ஈடுபட உள்ளனர். முதல்நாளான நேற்று முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கினர்.
முன்னதாக தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் முக கவசம் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்காக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. திருச்செங்கோடு வித்யாவிகாஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட கல்வி அதிகாரிகள் உதயகுமார், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story