சென்னையில் இருந்து காளையார்கோவில் வந்த தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு சென்னையில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு வருவதற்குள் காளையார்கோவில் வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சுகாதாரத்துறையினர் அந்த தீயணைப்பு படை வீரருக்கு இந்த தகவலை தெரிவித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த தீயணைப்பு படை வீரர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் தற்போது 6 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story