ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் ; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்


ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் ;  எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 28 May 2020 11:16 AM IST (Updated: 28 May 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் கட்ட கலைச்செல்வன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் கட்ட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விருத்தாசலம் புறவழிச்சாலையில் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் கட்ட ரூ.2 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதற்கு பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம், இணை சார்பதிவாளர் கணேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கூட்டுறவு சங்க பால்வள தலைவர் பச்சமுத்து, ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, நகர துணைச் செயலாளர் சத்யா செல்வம், ஒப்பந்ததாரர் சுபாஷ் சந்திரபோஸ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமு, தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற நகர இணைச் செயலாளர் மார்க்கெட் நடராஜன், துணை செயலாளர் பெரியசாமி, ராஜேந்திரன், வேலு, நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி, கோட்டேரி ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story