இடத்தகராறில் மோதல்: படுகாயமடைந்த விவசாயி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
செந்துறை அருகே இடத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த விவசாயி உயிரிழந்தார்.
செந்துறை,
செந்துறை அருகே இடத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த விவசாயி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடத்தகராறு
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள செதலவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகராஜன்(வயது 65), கார்த்திக் (30). இவர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் மகராஜன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய ஊழியர்கள் வந்து பணிகளை மேற்கொண்டனர்.
இதனைக் கண்ட அண்ணாதுரை மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடத்தகராறு உள்ள நிலையில் எப்படி எங்களது வீட்டின் வழியாக மின் இணைப்பு கொடுக்கலாம் என்று தட்டிக் கேட்டு உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
சாவு
இதில், படுகாயமடைந்த 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மகராஜன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏற்கனவே இரும்புலிக்குறிச்சி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மகராஜன் இறந்து விட்டதால் அதனை கொலை வழக்காக மாற்றி அன்பு மணியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story