அரியலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா
அரியலூர் மாவட்டத்தில், கொரோனா வைரசால் ஏற்கனவே 357 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 355 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 2 பேரில், ஒருவர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் சென்னை முகப்பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து அரியலூர் திரும்பிய 24 வயதுடைய ஆண் ஒருவருக்கும், சென்னையில் இருந்து ஊர் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 23, 22 வயதுடைய சகோதரர்களுக்கும், 42 வயதுடைய ஒருவருக்கும் மற்றும் 18 வயதுடைய பெண்ணுக்கும் என மொத்தம் 5 பேருக்கு கடந்த 23-ந் தேதி சுகாதாரத்துறையினரால் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன் முடிவு நேற்று வந்ததில், அவர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் 42 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 139 பேரில், 138 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர். இதில் பிரசவித்த பெண் ஒருவர் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் 27 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story