பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி கோவை மகிளா கோர்ட்டு உத்தரவு


பொள்ளாச்சி பாலியல் வழக்கு:  சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி கோவை மகிளா கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 May 2020 4:38 AM IST (Updated: 29 May 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சபரிராஜன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கோவை மகிளா கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27), அவரது நண்பர்களான சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (25), மணிவண்ணன் (27) ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைதான 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சபரிராஜன் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கோவை மகிளா கோர்ட்டில் ஆன்லைன் முலம் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து நேற்று நீதிபதி ராதிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சபரிராஜனுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்ததால் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

Next Story