குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது


குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது
x

அரியாங்குப்பம் அருகே ஓடைவெளி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அரியாங்குப்பம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஸ்வின் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த கொலை தொடர்பாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனை அறிந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ரவுடி அஸ்வினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருணுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று கலெக்டர் உத்தரவிட்டதால் அஸ்வினை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

Next Story