சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு


சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2020 5:19 AM IST (Updated: 29 May 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


புதுச்சேரி,

புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மண்ணாடிப்பட்டு அருகே உள்ள பெரியபேட் பகுதியில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து பெரியபேட்டில் உள்ள மாரியம்மன்கோவில் வீதி மற்றும் குடியிருப்பு ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story