மாவட்ட செய்திகள்

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்; கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் + "||" + Fishing ban-term relief for fishermen; Approval of Governor kiranbedi

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்; கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்; கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரியில் மீனவர் களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி,

புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் அன்று முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்தநிலை யில் மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தை வரும் 31-ந் தேதியுடன் முடித்துக் கொள்வதாகவும், வரும் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்காக மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-

மீனவ சொசைட்டி உறுப் பினர்கள் ஆண்டுக்கு ரூ.1,500 சேமித்து வந்தால் மத்திய அரசு ரூ.3,000 சேர்த்து ரூ.4,500 தரும். அதன்படி 7,965 மீனவர்களுக்கு ரூ.3½ கோடிக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் மீன்பிடி தடைக்கால நிவாரண மாக ஆண்டுதோறும் மாநில அரசு ரூ.5,500 வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 19,100 பேருக்கு ரூ.11 கோடி வழங்குவதற்கான கோப்புக்கு அனுமதி தரப்பட் டுள்ளது.

இதில் அங்கீகரிக் கப்பட்ட திட்டங்களையும், பொதுப்பணத்தையும் நாங்கள் கையாள்கிறோம். சரியானவர்களுக்கு நிதி சென்றடைகிறதா? என்பதை ஆராய்வது அவசியம். அதன்படியே அரசு பணம் தகுதியானவர்களுக்கு செல்கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலகத்துக்கு ஒரு உத்தரவை அனுப்பி உள்ளார். அதில், ‘பயனாளிகள் பட்டியலை நிர்வாகத் துறையானது, நிதித்துறையிடம் ஒப்படைத்து தலைமைச்செயலர் சரிபார்க்க வேண்டும். இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி இதை சரிபார்ப்பது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் கொரோனா பாதிப்பு தினமும் 100 ஆக மாறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்காவிட்டால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 100 ஆக மாறும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
2. கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் - அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு விடுத்துள்ளார்.
3. தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம் - கவர்னர் கிரண்பெடி வேதனை
புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு தனிநபர் பழக்க, வழக்கமே முக்கிய காரணம் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
4. ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் - கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்
புதுவையில் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
5. வழிபாட்டுத்தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.