கூடலூர் அருகே பெண்ணுக்கு கொரோனா தொற்று: வீடு, வீடாக சுகாதாரத்துறையினர் ஆய்வு
கூடலூர் அருகே பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீடு, வீடாக சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
சென்னை வளசரவாக்கத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொன்வயல் கிராமத்துக்கு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாய், தந்தை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களது சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர பொன்வயல் கிராமத்துக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறையினர் ஆய்வு
இந்த நிலையில் பொன்வயல், நாடுகாணி, பொன்னூர் ஆகிய 3 கிராமங்களில் வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மேலும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கபசுர பொடி, ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இது தவிர நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீனா சைமன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story