ஈச்சம்பாடி அணையை தூர்வாரும் பணி தீவிரம்; வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ள அனுமதி
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவுபடி ஈச்சம்பாடி அணையை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா ஈச்சம்பாடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஈச்சம்பாடி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு 28.24 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இந்த அணைக்கட்டில் உள்ள மதகின் அடிமட்டத்திற்கு மேல் சுமார் 1.25 மீட்டர் உயரத்திற்கு வண்டல்மண் படிந்து மேட்டுப்பகுதியாக காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால் நீண்ட நாட்கள் இந்த அணைக்கட்டில் தண்ணீர் தேங்குவதில்லை. இதன் காரணமாக சுற்றுப்பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் வறண்டு போய்விடுகின்றன. விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே ஈச்சம்பாடி அணையை தூர்வார வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று ஈச்சம்பாடி அணையை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஈச்சம்பாடி அணையை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அணையை தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஏரியில் அள்ளப்படும் வண்டல் மண்ணை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் டிராக்டர்களில் எடுத்து செல்கின்றனர்.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள காரிமங்கலம் தாசில்தார் மற்றும் தர்மபுரி பொதுப்பணித்துறை மேல் பெண்ணையாறு வடிநில கோட்ட அலுவலர்களை அணுகலாம் என்று கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.

Related Tags :
Next Story