பாபநாசம் முண்டந்துறை புதிய ஆற்றுப்பாலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


பாபநாசம் முண்டந்துறை புதிய ஆற்றுப்பாலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2020 7:38 AM IST (Updated: 29 May 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் முண்டந்துறை புதிய ஆற்றுப்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் முண்டந்துறை புதிய ஆற்றுப்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

முண்டந்துறை பாலம்

பாபநாசம் முண்டந்துறை ஆற்றுப்பாலமானது கடந்த 1992-ம் ஆண்டு வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் காரையார், சொரிமுத்து அய்யனார் கோவில், சேர்வலாறு பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு மின்சார துறையினர் அங்கு தற்காலிக தாம்போதி பாலம் கட்டினர்.

கனமழை காரணமாக சேர்வலாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், இந்த தற்காலிக பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்லும். காரையார், சேர்வலாறு பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 2016-ம் ஆண்டு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து, புதிய பாலம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம், புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். முண்டந்துறையில் நடந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் சாந்தி, கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், உதவி பொறியாளர் அல்பின் அஸ்மிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story