கொடைக்கானலில் ரூ.5 லட்சத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அகில இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
கொடைக்கானலில் அகில இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்,
ஊரடங்கு உத்தரவால் கொடைக்கானல் பகுதியில் அவதிப்படும் பொதுமக்களுக்கு அகில இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் இதுவரை ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உள்பட 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கொடைக்கானலில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி கொரோனா பரவலை தடுத்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதற்கு சங்க தலைவரும், முன்னாள் நகரசபை தலைவருமான கே.சி.எ.குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மூர்த்தி, சூசைஜான், தாவுது நாட்டுராயன், அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் நாராயணன், ஆர்.டி.ஓ. சிவகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தாசில்தார் வில்சன் தேவதாஸ், கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் சாம் ஆபிரகாம் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அத்துடன் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களான சலாமத், சோரன்சன், கருணாநிதி மற்றும் பலர் வழங்கிய ரூ.40 ஆயிரம் பலதுறையினருக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story