தேனியில் மழை: தீயணைப்பு நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது


தேனியில் மழை:  தீயணைப்பு நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 29 May 2020 8:30 AM IST (Updated: 29 May 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பெய்த பலத்த மழையால் தீயணைப்பு நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது.

தேனி,

தேனி தீயணைப்பு நிலையம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தேனியில் பலத்த மழை பெய்தது. அப்போது தீயணைப்பு நிலையத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து அங்கிருந்த மேஜை மீது விழுந்தது. அதன் அருகில் தீயணைப்பு படை வீரர்கள் சிலர் அமர்ந்து இருந்தனர். அவர்களின் அருகில் மேற்கூரை விழுந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.

Next Story