விடைபெற்ற அக்னி நட்சத்திரத்தை வாழ்த்தி அனுப்பிய கோடை மழை
தேனிமாவட்டத்தில், விடைபெற்ற அக்னி நட் சத்திரத்தை கோடை மழை வாழ்த்தி அனுப்பியது.
தேனி,
அக்னி நட்சத்திர வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. தினமும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தேனி மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த போதிலும், சில நாட்களில் மாலை வேளைகளில் மழை பெய்த வண்ணம் இருந்தது.
அக்னி நட்சத்திர காலத்தின் கடைசி நாளான நேற்றும் தேனியில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. தேனி நகரில் 95 டிகிரி அளவில் வெயில் அடித்தது. இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் பெரியகுளத்தில் பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்தில் தேனியிலும் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கும் மேல் இந்த மழை நீடித்தது.
வழியனுப்பிய மழை
இந்த பலத்த மழையால் தேனி நகர் பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகிய இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. ஆங்காங்கே மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இரு சக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். அதுபோல், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், போடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலையில் மழை பெய்தது.
அக்னி நட்சத்திர வெயிலை பலத்த மழை வழியனுப்பி வைத்துள்ளது. இந்த மழையால் மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையால் கோடை கால பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story