திருச்சி மாவட்டத்துக்கு மும்பையில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா


திருச்சி மாவட்டத்துக்கு மும்பையில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 May 2020 9:04 AM IST (Updated: 29 May 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தா.பேட்டை, 

மும்பையில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து வந்தவர்கள்

திருச்சி மாவட்டம் தா.பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் தையல்தொழிலாளியாக கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய உறவினரான உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான் பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரும் மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் மும்பையில் இருந்து பெங்களூரு வழியாக கோவைக்கு விமானத்தில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஒரே காரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்தனர். முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் இவர்களுக்கு கொரோனா சோதனைக்காக ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனர்.

5 பேருக்கு கொரோனா

இதில் தா.பேட்டையை சேர்ந்த 3 பேருக்கும் ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட தா.பேட்டை மற்றும் உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் இவர்களுடன் வந்த மற்ற உறவினர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த சுகாதார குழுவினர் இவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்களை கொரோனா அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

Next Story