மராட்டியத்தில் இருந்து ரெயில் மூலம் 899 பேர் மதுரை வந்தனர்


மராட்டியத்தில் இருந்து ரெயில் மூலம் 899 பேர் மதுரை வந்தனர்
x
தினத்தந்தி 29 May 2020 9:52 AM IST (Updated: 29 May 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 899 பேர் மதுரை வந்தனர்.

மதுரை,

மராட்டிய மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவித்த அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். வெளிமாநில தொழிலாளர்களான அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மராட்டிய அரசு முடிவு செய்தது. அதன்படி மராட்டியத்தில் வேலை பார்த்து வந்த தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த ரெயில் நேற்று மதியம் 3.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 39 பேர், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 556 பேர், தென்காசி-104, தேனி-8, சிவகங்கை-8, புதுகோட்டை-3, ராமநாதபுரம்-1, திண்டுக்கல்-31, விருதுநகர்-41, கன்னியாகுமரி-14, தூத்துக்குடி-75, நாகப்பட்டினம்-2, கோவை-6, திருச்சி-5, திருப்பூர்-2, கரூர்-4 ஆகிய பகுதியை சேர்ந்த 899 பேர் வந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசு பஸ்கள் மூலம் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story