வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர் மலர் தூவி வரவேற்ற மக்கள்
மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதை மலர் தூவி மக்கள் வரவேற்றனர்.
மதுரை,
மதுரை நகர மக்களுக்கு வைகை அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர மேலக்கால், கோச்சடை, மணலூர் ஆகிய வைகை ஆற்று பகுதிகளில் உள்ள ராட்சத கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இதுபோல் மதுரையை சுற்றியுள்ள சில கிராமங்களில் வைகை ஆற்றில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படும்.
இந்த ராட்சத கிணறுகள் கோடை காலத்தில் வறண்டு போய் விடும். எனவே ஆண்டு தோறும் கோடை காலத்தில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் ஆற்றில் பாய்ந்தோடும் போது குடிநீருக்காக போடப்பட்டுள்ள கிணறுகளில் ஊற்று ஏற்படும்.
வைகை அணை
இந்தாண்டு கொரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவில்லை. எனவே ஆற்றில் தண்ணீர் திறக்காததால் வைகை ஆற்றில் உள்ள ராட்சத கிணறுகள் வறண்டு போய் குடிநீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி வைகை அணையில் இருந்து கடந்த 25-ந் தேதி மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. 26-ந் தேதி வினாடிக்கு 850 கன அடி வீதமும், 27-ந் தேதி வினாடிக்கு 300 கன அடி வீதமும், 28-ந் தேதியான நேற்று மாலை 6 மணியுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
நீர் மட்டம்
அதிக அளவு பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் இருபுறமும் சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங் களை தண்ணீர் மூழ்கடித்தது.
பல மாதங்களுக்கு பிறகு ஆற்றில் தண்ணீர் சென்றதால் அதனை கண்டு களிக்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர். ஏ.வி. மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்தி ஆற்றில் தண்ணீர் செல்வதை ஆர்வத்துடன் பார்த்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் சென்றதால் ராட்சத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story