ஊரடங்கால் தடைபட்ட அமராவதி ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?
அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில், ஊரடங்கால் தடைபட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மீண்டும் எப்போது தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில், ஊரடங்கால் தடைபட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மீண்டும் எப்போது தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாலம் கட்டும் பணி
அரவக்குறிச்சி ஒன்றியத்தையும், க.பரமத்தி ஒன்றியத்தையும் இணைக்கும் பாலம், ராஜபுரம் அமராவதி ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. தற்போது பழுதடைந்த தடுப்புச்சுவரை அகற்றிவிட்டு புதிய தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் பணிகள் தொய்வடைந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த பாலத்தில் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே சென்றுவருகின்றனர். இரவு நேரங்களில் ஏதாவது ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திசை திரும்பிச்சென்றால் ஆற்றிற்குள் விழவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளி சுற்றுச்சுவர்
கரூர் மாவட்டம், தொண்டமாங்கிணம் அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும் என ஊர்பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்று சுற்றுச்சுவர் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. பின்னர் இந்த பணி, சில மாதங்களாக பள்ளியை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே இந்த பள்ளியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பினை அகற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story