ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி, காமராஜர்புரத்தில் சிகாமணி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் மறு சுழற்சி செய்வதற்காக அதிக அளவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அங்குள்ள குடோனில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரும் அங்கு பழைய கண்ணாடி பாட்டில்களை சேகரித்து வைத்திருந்தார்.
நேற்று யாரோ மர்மநபர் அந்த இடத்திற்கு அருகே இருந்த குப்பையில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. குப்பையில் பற்றிய தீ அருகே இருந்த பிளாஸ்டிக் பொருட்களில் பற்றியது. காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களிலும் தீ பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 2 தீயணைப்பு வண்டியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்தால் வடக்கு மலையடிப்பட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story