ரூ.40 லட்சம் செலவில் குடிமராமத்து பணி; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ரூ.40 லட்சம் செலவில் குடிமராமத்து பணி;  எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2020 10:47 AM IST (Updated: 29 May 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் ரூ.40 லட்சம் செலவில் குடிமராமத்து பணியை முருகுமாறன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ஸ்ரீமுஷ்ணம்,

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீழ்புளியங்குடி தாமரை ஏரி முதல்-அமைச்சசரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் புனரமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு விருத்தாசலம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணி மோகன் தலைமை தாங்கினார். பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான என்.முருகுமாறன் கலந்து கொண்டு குடிமராமத்து திட்ட பணியை தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, நகர செயலாளர் பூமாலை.கேசவன், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கோ.பாலசுந்தரம், ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட கவுன்சிலர் நவநீதக்கிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை சேர்மன் திருச்செல்வம், ஒன்றிய துணை செயலாளர் ஜோதி பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இ.கே.பி.மணிகண்டன், நகர அ.தி.மு.க. பாசறை செயலாளர் ராஜ ராயர், நிர்வாகிகள் அய்யப்பன், செந்தில், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழத் தரம் நல்லாண் ஏரி குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் செலவில் புனரமைக்கும் பணியையும் என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது நந்தீஸ்வரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மோகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சி ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உமா தலைமை தாங்கி, குடிமராமத்து திட்ட பணியை தொடங்கி வைத்தார். அப்போது கூட்டுறவு வங்கி தலைவர் தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பரமசிவம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெருமாள், முருகேசன், சிவக்குமார், மணிகண்டன், அய்யாசாமி, ராமசாமி, செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story