அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூரில் நிறைவடைந்த அரசு திட்டப்பணிகள்
அரியலூர், ஜெயங்கொண்டம் பெரம்பலூரில் நிறை வடைந்த அரசு திட்ட பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொ லிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரியலூர்,
அரியலூர், ஜெயங்கொண்டம் பெரம்பலூரில் நிறை வடைந்த அரசு திட்ட பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொ லிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பாதாள சாக்கடை திட்டம்
அரியலூர் அருகே குருமஞ்சாவடியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.23 கோடியே 43 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 288 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், ஜெயங்கொண்டத்தில் ரூ.2 கோடியே 10 லட்சத்தில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் அரியலூர் நகராட்சி பகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.30 கோடியே 93 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கலெக்டர் ரத்னா முன்னிலையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர், பார்பனச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்.
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம்
இதேபோல, முதல்-அமைச்சரால் திறக்கப்பட்ட ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ரத்னா முன்னிலையில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்.
இதில்அரசுதுறை அதிகாரி கள் பலர் கலந்து கொண் டனர்.
அறிவியல் ஆய்வகம்
மேலும், பெரம்பலுார் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் 10 வகுப்பறைகளுக்கான கூடுதல் கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வகத்தையும் முதல்-அமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளியில் கலெக்டர் சாந்தா குத்துவிளக்கேற்றி, 10 வகுப்பறைகளுக்கான கூடுதல் கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story