அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்


அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு  மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 May 2020 3:15 AM IST (Updated: 30 May 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

2020-2021-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.5 கோடியே 33 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த நிதியை பயன்படுத்துவது குறித்தும், மாவட்ட ஊராட்சி குழுவின் சிறப்பு கூட்டமும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் சிவகாமி, செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் நிதிக்குழு ஒதுக்கிய மானியத்தை பயன்படுத்துவது குறித்தும், ஊராட்சி பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 17 மாவட்ட கவுன்சிலருக்கும் தலா ரூ.30 லட்சம் வீதம் மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் சுகாதாரத்திற்கும், குடிநீர் பிரச்சினைக்கும் என தலா ரூ.7½ லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story