கொரோனா பணிக்காக திருமணத்தை தள்ளி வைத்த போலீஸ்காரர்
கொரோனா பணி காரணகாக ஒரு போலீஸ்காரர் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.
திருப்பூர்,
கொரோனா பணிக்காக கோவைப்புதூரில் இருந்து பட்டாலியன் போலீஸ் குழுவினர் ஒன்று கடந்த மாதம் திருப்பூர் வந்தனர். இதில் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ் பிரபு (வயது 29) என்பவரும் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த 27-ந் தேதி பொள்ளாச்சியில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரசின் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெங்கடேஷ் பிரபுவும் கொரோனா பணியில் உள்ளதால் இரு வீட்டிலும் பேசி அவரது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ஊரடங்கு அமலில் உள்ளது. இதுதவிர கொரோனா பணியில் உள்ளேன். தற்போது, திருமணம் செய்ய சூழல் இல்லாத காரணத்தால், தள்ளி வைத்து, பணியில் உள்ளேன். ஊரடங்கு முடிந்ததும், திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

Related Tags :
Next Story