திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ரூ.5¼ கோடியில் பாலங்கள் கட்டும் பணி அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு


திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ரூ.5¼ கோடியில் பாலங்கள் கட்டும் பணி அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு
x
தினத்தந்தி 30 May 2020 4:33 AM IST (Updated: 30 May 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ரூ.5¼ கோடியில் நடைபெற்று வரும் பாலங்கள் கட்டும் பணியை அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு செய்தார்.

திருவிடைமருதூர்,

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ரூ.5¼ கோடியில் நடைபெற்று வரும் பாலங்கள் கட்டும் பணியை அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு செய்தார்.

பாலங்கள் கட்டும் பணி

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசலாற்றில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், மேலையூர் நாட்டாற்றில் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பிலும், மல்லபுரம் கீர்த்திமானாற்றில் ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.5 கோடியே 33 லட்சம் மதிப்பில் 3 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

நபார்டு திட்டங்கள் மூலம் நடைபெற்று வரும் இந்த பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைக்கண்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொறியாளர்களிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

குடிமராமத்து பணி

மேலும் பணிகளை துரிதப்படுத்தும்படி அறிவுறுத்தினார். முன்னதாக அவர் செம்மங்குடி சாவடி குளம், வண்டுவாஞ்சேரி ஊராட்சி ஆண்டாலூர் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பவுண்டரிகபுரம் கீர்த்திமானாறு குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்.

ஆய்வின்போது வட்டார நிலவள வங்கி தலைவர் ஏ.வி.கே. அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் தயாளன், ஆணையர்கள் முருகன், சுவாமிநாதன், தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர்கள் கரு.முத்துராமலிங்கம், பாலசுப்பிரமணியன், தங்கவேல், செல்வராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சூரியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் லதாமுத்துகிருஷ்ணன், லட்சுமிராஜகுரு, மலர்செல்விசிவகுமார் மற்றும் அ.தி.மு.க.வினர் சார்லஸ், காமராஜ், சசிகுமார், சரவணன், இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story