2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மலரும்: வெள்ளை அந்திமந்தாரை மரத்தில் பூத்துக்குலுங்கும் பூக்கள்


2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மலரும்: வெள்ளை அந்திமந்தாரை மரத்தில் பூத்துக்குலுங்கும் பூக்கள்
x
தினத்தந்தி 30 May 2020 5:17 AM IST (Updated: 30 May 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் வெள்ளை அந்திமந்தாரை பூக்கள் பூத்துக்குலுங்கின.

சத்திரப்பட்டி,

சத்திரப்பட்டி ரெயில்வே கேட் அருகே விளைநிலத்தில் வெள்ளை அந்திமந்தாரை மரம் உள்ளது. இந்த மரத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கள் பூக்கும். அதுவும் இரவில் தான் பூக்கள் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இந்த மரத்தை ராப்பூத்தா மரம் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கின. அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு தான் இந்த மரத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து பூக்களை பார்த்து ரசித்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மரம் மிகவும் தெய்வீக தன்மை கொண்டது என நாங்கள் நம்புகிறோம். இதன் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த மரத்தை வணங்கி வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த மரத்தின் பூக்கள் மிகுந்த வாசனை கொண்டதாகும் என்றனர்.

Next Story