கிரானைட் கல் விழுந்து ஆபரேட்டர் பலி: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு


கிரானைட் கல் விழுந்து ஆபரேட்டர் பலி: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 May 2020 5:19 AM IST (Updated: 30 May 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் அனுசோனபுரா பகுதியை சேர்ந்தவர் அனுமையா (வயது 46). இவர் சூளகிரி அடுத்த பிள்ளை கொத்தூர் பகுதியில் உள்ள மிராக்கிள் ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

சூளகிரி,

சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த போது, அனுமையா மீது கிரானைட் கல் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, சாமனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில் சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் பணி செய்ய வைத்தது தான் விபத்துக்கு காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து பெங்களூரு பன்னார்கட்டா சாலையை சேர்ந்த தவான் கோட்டாச்சியா (43), பெங்களூரு சேஷாத்திரிபுரம் ஆஞ்சநேயர் கோவில் சாலையை சேர்ந்த நிறுவன உரிமையாளர் லிகிப் (28) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பர்கத் நகரை சேர்ந்த மேலாளர் அங்குஷ் (40) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story