வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை
மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி,
கம்பம் டி.டி.குளம் பகுதியை சேர்ந்தவர் பரமன் (வயது 60). இவர், கம்பம் அருகே மஞ்சள்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தனது மனைவி அழகுத்தாயுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பரமன் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தோட்டத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுபோல், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருத்தமலைப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜோதி (50). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் தினேஷ் அளித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுகுடிக்க பணம் கொடுக்காததால்...
அதுபோல், சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (60). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், இவர் தனது மகன் முகமது யூனிசிடம் மதுகுடிக்க அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 26-ந்தேதி பணம் கொடுக்காததால் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story