குமரியில் ரூ.4 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவிலில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் ரூ.4 கோடிக்கான வளர்ச்சி பணிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் ரூ.4 கோடிக்கான வளர்ச்சி பணிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, பரமேஸ்வரன், அம்பிளி, லூயிஸ், ஜோபி, செலின்மேரி, ஷர்மிலா ஏஞ்சல், ராஜேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்- அமைச்சருக்கு நன்றி
கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மாவட்ட பஞ்சாயத்து செலவினங்கள் அங்கீகரிக்கப்பட்டது. ரூ.3 கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்துக்கான வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து மன்றத்தில் வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தல் தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
15-வது நிதிக்குழு
பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் பேசும்போது, ‘15-வது மாநில நிதிக்குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மாவட்ட பஞ்சாயத்து மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
அதில் 50 சதவீத பணிகள் பொது பணிகளாகவும், 25 சதவீத பணிகள் குடிநீர் திட்டப் பணிகளாகவும், 25 சதவீத பணிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது“ என்றார்.
Related Tags :
Next Story