5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 14 வயது சிறுவன் கைது
சோழசிராமணியை சேர்ந்த 14 வயது சிறுவன் அவனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
பரமத்திவேலூர்,
போலீசார் விசாரணை நடத்தி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறுவன் மற்றும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து நாமக்கல் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி ஜெயந்தி உத்தரவின்படி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அந்த சிறுவனை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story