எடப்பாடி அருகே மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்


எடப்பாடி அருகே மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்
x
தினத்தந்தி 30 May 2020 8:13 AM IST (Updated: 30 May 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி வட்டாரத்தில் வெள்ளரிவெள்ளி, சித்தூர் பகுதிகளில் 674 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

எடப்பாடி.

மரவள்ளி பயிர் நன்கு வளர்ந்து கிழங்கு வைக்கும் பருவத்தில் உள்ளது. இந்த நிலையில் மரவள்ளி பயிரில் ஒருசில இடங்களில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன், மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோர் எடப்பாடி அருகே உள்ள வெள்ளக்கவுண்டனூர் பகுதியில் மாவுப்பூச்சியால் தாக்கப்பட்ட மரவள்ளி பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சத்யா, வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெங்கடாஜலம், மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் ஏத்தாப்பூர் கவிதா, தோட்டக்கலை வல்லுனர் கீதா ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளிடம் தற்போதைய நிலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

Next Story