திருச்சி மாநகர பகுதிகளில் தினமும் 4,500 லிட்டர் தண்ணீரில் கிருமிநாசினி மருந்து கலந்து தெளிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களை கடந்து விட்டன.
திருச்சி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களை கடந்து விட்டன.
இந்தநிலையில் திருச்சி மாநகர பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். தீயணைப்பு வாகனத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் நாளொன்றுக்கு 4,500 லிட்டர் தண்ணீரில் கிருமிநாசினி மருந்துகள் கலந்து தெளித்து வருகிறார்கள்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கடந்த 67 நாட்களில் இதுவரை 3 லட்சத்து ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீரில் கிருமிநாசினி மருந்துகள் கலந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஏற்பாட்டின்படி, கிருமிநாசினி மருந்து தெளிக்கும் தீயணைப்புவீரர்களுக்கு கருநீல நிறத்தினால் ஆன புதிய பாதுகாப்பு உடை மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த உடையுடன் தீயணைப்புவீரர்கள் கிருமிநாசினி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையஅலுவலர் மெல்கியூராஜா கூறுகையில், “தினமும் 2 மணிநேரம் கிருமிநாசினி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இது தவிர, வாரத்துக்கு 2 முறை அரசு மருத்துவமனைகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story