நம்மில் ஒருவராக இருந்த “கொரோனா நோயாளிகளை ஒதுக்கக்கூடாது” காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு


நம்மில் ஒருவராக இருந்த “கொரோனா நோயாளிகளை ஒதுக்கக்கூடாது” காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 30 May 2020 9:20 AM IST (Updated: 30 May 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளை ஒதுக்கக்கூடாது என்று காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் உச்சப்பட்டி கிராமத்தை தத்தெடுக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி அந்த கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, கல்லூரி முதல்வர்(பொறுப்பு)தேன்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கலந்துகொண்டு 750 பேருக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா நோய் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. நமக்குள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிய வேண்டும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே நோயிலிருந்து தப்பித்து விடலாம். நம் வீட்டையும் நம்மை சுற்றி உள்ள பகுதியையும் முழு சுகாதாரமாக பேணி காக்க வேண்டும்.

நம்மில் ஒருவராக இருந்தவருக்கு தான் எதிர்ப்பு சக்தி இல்லாததால் கொரோனா நோய் தொற்றி உள்ளது. கொரோனா நோயாளிகளை ஒதுக்கி விடக்கூடாது. நம்மில் ஒருவராக நினைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருமங்கலம் தாலுகா தாசில்தார் தனலட்சுமி, உச்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள், கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் முரளிதரன், கல்லூரி கண்காணிப்பாளர் அழகர்சாமி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story