டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ.3½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.3½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நேற்றுமுன்தினம் இரவு பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
நேற்று கடையை திறக்க வந்தபோது, கடையின் ஜன்னலுக்கு கீழே துளையிட்டு இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வலைவீச்சு
இதையடுத்து மேலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கடையினுள் இருந்த 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50-க்கு மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர் .

Related Tags :
Next Story